தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பி.பி.ஏ., - பி.சி.ஏ., படிப்புக்கும் ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறை அமல்

பி.பி.ஏ., - பி.சி.ஏ., படிப்புக்கும் ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறை அமல்

பி.பி.ஏ., - பி.சி.ஏ., படிப்புக்கும் ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறை அமல்


ADDED : ஜன 10, 2024 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 12:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,:உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு, மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும்.

அதன்படி, இன்ஜினியரிங், ஆர்க்கிடெக், நகர அமைப்பு, மேலாண்மை, மருந்து உற்பத்தி போன்ற தொழில்நுட்ப படிப்புகள், ஏ.ஐ.சி.டி.இ., விதிகளில் அடங்கும்.

கணினி அறிவியல் மற்றும் மேலாண்மை சார்ந்த, எம்.சி.ஏ., - எம்.பி.ஏ., முதுநிலை படிப்புகளுக்கு மட்டும், தற்போது ஏ.ஐ.சி.டி.இ., வழியே ஒழுங்குமுறை விதிகள் அமைக்கப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் கல்வியாண்டில், பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.எம்.எஸ்., ஆகிய இளநிலை படிப்புகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., ஒழுங்குமுறை விதிகள் அமலாக உள்ளன.

எனவே, அனைத்து மாநில பல்கலைகளும், தங்கள் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், மேற்கண்ட இளநிலை படிப்புகளை நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., ஒழுங்குமுறை விதிகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us