மாற்றுத்திறனாளி பயணியரிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்க! நடத்துநருக்கு மந்திரி அறிவுரை
மாற்றுத்திறனாளி பயணியரிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்க! நடத்துநருக்கு மந்திரி அறிவுரை
ADDED : மே 03, 2025 08:41 PM
சென்னை:'அரசு பஸ்சில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளிடம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கனிவாக நடக்க வேண்டும்' என, அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
1பஸ் நிறுத்தத்தில், ஒரு மாற்றுத்திறனாளி பயணி நின்றாலும், முறையாக ஏற்றிச் செல்ல வேண்டும். நிறுத்தத்திற்கு முன்பாகவோ, தள்ளியோ நிறுத்தி, சிரமம் ஏற்படுத்தக் கூடாது; இடமில்லை என, இறக்கி விடக்கூடாது
2இருக்கையில் அமர்ந்தவுடன், கனிவுடன் பயணச்சீட்டு வழங்கி, இறங்க வேண்டிய இடங்களில் பஸ்சை நிறுத்தி, காத்திருந்து இறக்கி விட வேண்டும்
3மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் சாதாரண பயணி அமர்ந்திருந்தால், அவர்களை கனிவுடன் மாற்று இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி பயணியரின் மனம் புண்படும் வகையில் பேசக்கூடாது
4அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி, மாநில முழுதும், 75 சதவீத கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்
5இயற்கை சீற்றம் ஏற்படும் நாட்களில், நிறுத்தம் இல்லாத இடங்களிலும் நிறுத்தி ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.