தி.மு.க., கூட்டத்தில் பீர் விருந்து: எஸ்.பி., ஆபீசில் பா.ஜ., மனு
தி.மு.க., கூட்டத்தில் பீர் விருந்து: எஸ்.பி., ஆபீசில் பா.ஜ., மனு
ADDED : மே 01, 2025 05:43 AM

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுார் தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பீர் பாட்டிலுடன், கறி விருந்து வழங்கிய வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.,வினர் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
பா.ஜ., கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :
சில தினங்களுக்கு முன், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி திருக்கோவிலுார் வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி இளைஞரணி அமைப்பாளர்கள், கூட்டம் நடந்தது.
![]() |
கூட்டத்திற்கு அக்கட்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலரும் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு பொது இடத்தில் இரவு 7:00 மணிக்கு, பீர் பாட்டிலுடன் கறி விருந்து வழங்கி உள்ளார்.
இது சட்டப்படி குற்றம். இது, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.