ADDED : ஏப் 23, 2026 02:33 AM

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து, 590 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டர் கிடைத்ததையடுத்து, 'பி.இ.எம்.எல்., நிறுவனத்தின்' பங்கு விலை நேற்று 8 சதவீதம் உயர்ந்து 1,910 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டு, பிறகு 1,830 ரூபாயில் நிறைவடைந்தது.
இந்திய ராணுவத்தின் டி-72 மற்றும் டி-90 டாங்கிகளில் பொருத்தப்படும் உதிரி பாகங்களை வழங்க, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது, மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு வலுசேர்க்கும் என, நிறுவன தலைவர் சாந்தனு ராய் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 15,158 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதம் சந்தித்த சரிவிலிருந்து, தற்போது 40 சதவீதம் வரை மீண்டுள்ளது. உள்நாட்டு ஆர்டர்கள் மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் கிட்டத்தட்ட 337 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
