sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே'யில் குண்டு வெடிப்பால் ஹை அலெர்ட்! பஸ்சில் வந்தவர் பற்றி முதல்வர் பகீர் தகவல்

/

பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே'யில் குண்டு வெடிப்பால் ஹை அலெர்ட்! பஸ்சில் வந்தவர் பற்றி முதல்வர் பகீர் தகவல்

பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே'யில் குண்டு வெடிப்பால் ஹை அலெர்ட்! பஸ்சில் வந்தவர் பற்றி முதல்வர் பகீர் தகவல்

பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே'யில் குண்டு வெடிப்பால் ஹை அலெர்ட்! பஸ்சில் வந்தவர் பற்றி முதல்வர் பகீர் தகவல்


UPDATED : மார் 03, 2024 12:57 AM

ADDED : மார் 03, 2024 12:01 AM

Google News

UPDATED : மார் 03, 2024 12:57 AM ADDED : மார் 03, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள 'ராமேஸ்வரம் கபே' என்ற உணவகத்தில், நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, மாநிலம் முழுதும் ஹை அலெர்ட் செய்யப்பட்டுள்ளது.

''பஸ்சில் வந்த நபர் தான் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்,” என, முதல்வர் சித்தராமையா உறுதி செய்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில், தேசிய பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த ப்ரூக்பீல்டில் இயங்கி வரும் பிரபல ராமேஸ்வரம் கபே என்ற உணவகம், வாடிக்கையாளர்கள் நிரம்பி எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது; 10 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம், பெங்களூரு உட்பட நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட துகள்களை தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். கர்நாடக போலீசார், தேசிய புலனாய்வு அமைப்பு, உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும், கபேயில் வெடித்தது வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டதால், இவ்வழக்கு விசாரணையை மாநில அரசு நேற்று சி.சி.பி.,யிடம் ஒப்படைத்தது. எட்டு தனிப்படைகள் அமைத்து, குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர்.

உணவகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும், 'சிசிடிவி' காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர்.

அதில், 500சி என்ற, பி.எம்.டி.சி., அரசு பஸ்சில் இருந்து இறங்கிய நபர், நேற்று முன்தினம் காலை 11:50 மணிக்கு உணவகத்துக்கு பெங்களூரு 'ராமேஸ்வரம் கபே'யில்...வந்துள்ளார்.

தலையில் வெள்ளை தொப்பி அணிந்தபடி, முகக் கவசத்தால் முகத்தை மறைத்தபடி, கருப்புப் பையுடன் உணவகத்துக்குள் நுழைந்துள்ளார். கேஷியரிடம் பணத்தைக் கொடுத்து, ரவா இட்லி வாங்கி சாப்பிட்டுள்ளார். பின், வாடிக்கையாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருக்கும் மரத்தடியில், தான் கொண்டு வந்த பையை வைத்துவிட்டு, இடத்தை விட்டு தப்பியுள்ளார்.

முதல்வர் ஆறுதல்


இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. வெடித்த குண்டு, 'டைம் பாம்' வகையைச் சேர்ந்தது என, துணை முதல்வர் சிவகுமார் உறுதி செய்தார். நேற்று காலை தேசிய பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் உணவகத்தில், என்னென்ன பாதுகாப்பு குளறுபடி இருந்தது என்பதையும் ஆராய்ந்தனர். உள்ளூர் போலீசார் மற்றும் சம்பவத்தை பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தினர்; படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் தகவல் பெற்றனர்.

இதற்கிடையில் தமிழகத்தின் கோயம்புத்துாரில், 2022ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும், பெங்களூரு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாமென சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தமிழகத்தில் இருந்து ஒரு சிறப்பு பிரிவினர், பெங்களூரு வந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், வைதேஹி, ப்ரூக்பீல்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, முதல்வர் சித்தராமையா நேரில் சென்று நலம் விசாரித்தார்; அவர்களுக்கு ஆறுதல் கூறினார். லேசான காயமடைந்த இருவர் நேற்று மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்; எட்டு பேர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.

பயங்கரவாத தொடர்பு?


குண்டு வெடித்த இடத்தில் முதல்வர் ஆய்வு நடத்தினார். பெங்., கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் ரமண குப்தா, முதல்வருக்கு விளக்கினார். பின், முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

வெடிகுண்டு வெடித்திருப்பது உண்மை தான். குற்றவாளி முகக்கவசம், தொப்பி அணிந்து வந்துள்ளார்; பஸ்சில் வந்து உணவு சாப்பிட்டுள்ளார்; வெடிகுண்டு இருந்த பையை வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

மங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவம் போன்று உள்ளதா என்பது, விசாரணையில் தெரிய வரும். குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தீவிரமாகக் கண்டிக்கிறேன். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பலத்த பாதுகாப்பு


இதன் பின், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மாநில டி.ஜி.பி., அலோக் மோகன், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, கூடுதல் கமஷினர்கள் ரமண குப்தா, சதீஷ்குமார் உட்பட உயர் அதிகாரிகளுடன் நேற்று மாலை முதல்வர் சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ''உளவுத்துறை மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ரோந்து செல்வதை அதிகப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, சம்பவத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்,” என, அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், மெஜஸ்டிக் பஸ் நிலையம், சங்கொள்ளி ராயண்ணா பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் உட்பட, மாநிலம் முழுதும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us