ADDED : மார் 11, 2024 04:38 AM

சென்னை: மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகள், தானியங்கி மற்றும் பலமுனை பட்டு நுாற்பாளர்கள் மற்றும் விதைக்கூடு உற்பத்தியாளர்கள் என, 12 பேருக்கு பரிசு தொகைக்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிக்கான பரிசுக்கு, சேலம் ஜெயந்தி; திருப்பூர் பூபதி; தென்காசி அருள்குமரன்; சிறந்த தானியங்கி பட்டு நுாற்பாளராக, கிருஷ்ணகிரி முகமது மதீனுல்லா; திருப்பூர் பெருமாள், ராம்சங்கர்.
சிறந்த பலமுனை பட்டு நுாற்பாளராக, தர்மபுரி சாந்தமூர்த்தி; சேலம் நாகராஜன்; தர்மபுரி வேதவள்ளி; சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளராக, கிருஷ்ணகிரி திலீப்குமார், கிருஷ்ணப்பா, மஞ்சுநாதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு முறையே முதல் பரிசாக, 1 லட்சம்; இரண்டாம் பரிசாக 75,000; மூன்றாம் பரிசாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. விருதாளர்கள் 12 பேருக்கு, 9 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, கடந்த 8ம் தேதி தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

