ADDED : நவ 09, 2025 01:04 AM
தமிழக அரசு துறைகளில் தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை, கடந்த 2008ல் பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு, மூன்று ஆண்டுகள் தி.மு.க., தான் ஆட்சியில் இருந்தது. உண்மையாகவே, அவர்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால், அப்போதே அரசாணையை செயல்படுத்தி இருக்கலாம்.
தற்போது, பணி நிரந்தரத்துக்கான வாய்ப்புகளையும், அவர்களுக்காக சிறப்பு ஆள்தேர்வு முகாம் நடத்துவதையும், ஒற்றை அரசாணை வாயிலாக தி.மு.க., அரசு பறித்திருக்கிறது. பணி நிரந்தரம் கிடைக்காத அளவிற்கு தடைச்சுவரை எழுப்பியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு துரோகங்களை இழைப்பதில் மட்டும் தான் தி.மு.க., சமநிலையை கடைப்பிடித்து வருகிறது.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,

