தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பி.ஹெச்.இ.எல்., பங்கு விலை உயர்வு

 பி.ஹெச்.இ.எல்., பங்கு விலை உயர்வு

 பி.ஹெச்.இ.எல்., பங்கு விலை உயர்வு


ADDED : பிப் 05, 2026 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்' நிறுவனத்துக்கு, 'ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்திடமிருந்து 1,200 - 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆர்டர் கிடைத்துள்ளது. ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டம், லபங்காவில் அமைந்துள்ள ஹிண்டால்கோவின் ஆதித்யா அலுமினியம் ஆலையில் நடைபெறஉள்ள, ஆதித்யா விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், 150 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பாய்லர் டர்பைன் ஜெனரேட்டர் வடிவமைப்பு, பொறியியல், விநியோகம், நிறுவுதல், திட்டத்தை இயக்க நிலைக்கு கொண்டு வருதல் மற்றும் செயல்திறன் சார்ந்த சோதனைகளுக்கான அனைத்து பணிகளையும் பி.ஹெச்.இ.எல்., மேற்கொள்ள உள்ளது.

இதற்கான ஒப்புதல் ஆவணம் கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பி.ஹெச்.இ.எல்., நிறுவனத்தின் பங்கு விலை 1.79 சதவீதம் உயர்ந்து 272.70 ரூபாய்க்கு வர்த்தகமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us