ADDED : நவ 18, 2025 06:32 AM

தமிழகத்தில், 10 முதல், 15 ஓட்டுகள் ஒரே நபருக்கு இருப்பதை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பீஹாரில், மத்திய அரசு பல கோடி ரூபாய் மதிப்பில், பல திட்டங்களை கொண்டு வந்து, அம்மாநிலத்தை வளமாக்கி இருக்கிறது. அடுத்த, 10 ஆண்டுகளில் பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர்கூட தமிழகத்துக்கு வர மாட்டார்கள்.
அப்போது இங்குள்ளோர் தான் வேலை செய்தாக வேண்டும். தமிழகத்தில் வழங்கப்படும் இலவச திட்டங்களால், வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனால்தான் வட மாநிலங்களிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் நடக்கும் கொலை - கொள்ளை குற்றங்களுக்கு, மது, போதை பழக்கமே முழு காரணம். இவற்றை தடுக்க தவறிய தி.மு.க., அரசுக்கு 2026 சட்டசபை தேர்தல் பாதகமாகவே அமையும்.
- ஏ.சி.சண்முகம்
தலைவர், புதிய நீதி கட்சி

