உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 24, 2026 06:16 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் பல்வேறு துறைகள் தொடர்பான சட்டங்கள் அமலில் உள்ளன. இந்த சட்டங்களில், அந்தந்த காலத்துக்கு ஏற்ற வகையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, பிரதான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த சட்ட திருத்தங்களை, மாநில சட்ட ஆணையம் ஆய்வு செய்தது.
இதில், காலாவதியான மற்றும் தேவையற்ற திருத்த சட்டங்களை நீக்க மாநில சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான இரண்டு மசோதாக்களை, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
அதில், 1889ம் ஆண்டு தமிழக கிராம நீதிமன்றங்கள் சட்டம், 1940ம் ஆண்டு த மிழக கால்நடை மேம்பாட்டு சட்டம், 2018ம் ஆண்டு தமிழக கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டம் உட்பட, 428 திருத்த சட்டங்களை நீக்குவதாக கூற ப்பட்டுள்ளது.
