ADDED : டிச 16, 2024 02:18 AM

தேனி: தேனியில் மதுரை ரோட்டில் பீமா ஜூவல்லரி திறப்பு விழா நடந்தது. நிறுவன தலைவர் கோவிந்தன், நிர்வாக இயக்குனர் சுஹாஸ் தலைமை வகித்தனர். ஜெயா கோவிந்தன், காயத்ரி சுஹாஸ், நவ்யா சுஹாஸ், மான்யா சுஹாஸ் முன்னிலை வகித்தனர். நடிகை அபர்ணா பாலமுரளி ஷோரூமை திறந்து வைத்தார். ராயல் லயன்ஸ் கிளப் நிர்வாகி செல்வ கணேஷ், வணிகர் சங்கங்கள் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வக்குமார், வாடிக்கையாளர்கள் மகேஸ்வரி, ரீனா குத்து விளக்கு ஏற்றினர்.
'ஆன்டிக்' நகை விற்பனை பிரிவை ராயல் லயன்ஸ் கிளப் நிர்வாகி வெற்றிவேல், வைர நகை பிரிவை எல்.எஸ்., மில்ஸ் நிர்வாக இயக்குனர் பிரபாகரன், வெள்ளி நகை பிரிவை என்.ஆர்.டி. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் தியாகராஜன் திறந்து வைத்தனர்.ஜூவல்லரி அலுவலர்கள், விழாவை ஒருங்கிணைத்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு 15 சதவீதம் வரை செய்கூலி கொண்ட தங்க நகை வாங்கினால், கிராமிற்கு ரூ.375 தள்ளுபடியுடன், இலவச தங்க நாணயம், அன்பளிப்பு வழங்கப்படும். வைர நகைகளுக்கு ஒரு கேரட்டிற்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடியுடன், இலவச தங்க நாணயம், அன்பளிப்பு வழங்கப்படும். பெரும்பாலான வெள்ளி, பிளாட்டினம் பொருட்களுக்கு செய்கூலி இல்லை. 'ஆன்டிக்' நகைகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும். பழைய தங்கத்தை 'எக்ஸ்சேஞ்ச்' செய்தால் கிராமிற்கு ரூ.150 கூடுதலாக வழங்கப்படும். இச்சலுகைகள் குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பர்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என, பீமா ஜூவல்லரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.