ADDED : பிப் 11, 2025 03:35 AM
தேனி : அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் 'பயோ மெட்ரிக் கருவி'கள் முழு அளவில் பயன்பாட்டிற்கு வந்தன.
மாநிலம் முழுவதும் 1324 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் செயல்படுகின்றன. இதில் மாணவர்கள், காப்பாளர்கள், சமையலர்கள் ஆகியோரின் வருகை பதிவிற்கு 'பயோ மெட்ரிக் மிஷின்' கள் அமைக்கப்பட்டன. ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகத்தில் இந்த பதிவுகள் சேகரமாகும். இதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. படிப்படியாக அவை களையப்பட்டு தற்போது முழு அளவிலான இயக்கம் தொடங்கியுள்ளது.
மாணவர்கள், சமையலர், காப்பாளர்கள் பயோ மெட்ரிக்கில் விரல்பதிவு செய்ய வேண்டும்.
துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், விரல்ரேகை மட்டும் இன்றி, கண்கள் கருவிழி பதிவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். இதனால் சமையலர்கள், காப்பாளர்கள் முறையான நேரத்தில் விடுதிக்கு வருகின்றனர். இந்த தரவுகள் தலைமை அலுவலகத்தில் பதிவாவதில் சிறு பிரச்னை உள்ளது. அதை சரி செய்ய இயக்குனரகம் ஆய்வு செய்து வருகிறது என்றார்.

