தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பறவை காய்ச்சல் எதிரொலி; ஆந்திர கோழி, முட்டைக்கு தடை

பறவை காய்ச்சல் எதிரொலி; ஆந்திர கோழி, முட்டைக்கு தடை

பறவை காய்ச்சல் எதிரொலி; ஆந்திர கோழி, முட்டைக்கு தடை


UPDATED : அக் 07, 2026 09:45 PM

ADDED : அக் 07, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 09:45 PM ADDED : அக் 07, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பத்துார்: பறவை காய்ச்சல் எதிரொலியால், ஆந்திராவிலிருந்து வரும் கோழி, முட்டைகளுக்கு தடை விதித்து, திருப்பத்துார் கலெக்டர் நல்லசிவன் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், அனந்தபூரில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதன் எதிரொலியாக, திருப்பத்துார் மாவட்டத்தில், பறவை காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் நல்லசிவன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், கால்நடை பராமரிப்பு துறை, பொது சுகாதாரம், காவல், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் பங்கேற்றனர்.

கலெக்டர் நல்லசிவன் பேசியதாவது:

ஆந்திர மாநிலம், அனந்தபூரில், பறவை காய்ச்சல் பரவிய நிலையில், திருப்பத்துார் மாவட்டத்தில், தமிழக – ஆந்திர எல்லையோர பகுதியான, வெலத்தி மானிக பெண்டா, கொத்துார், தொட்டிக்கிணறு, கொல்லப்பள்ளி ஆகிய இடங்களில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், செக்போஸ்ட் அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்திலிருந்து, திருப்பத்துார் மாவட்டத்திற்குள் கோழி, முட்டை, பிற பறவை இனங்களின் இறைச்சியை ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆந்திர மாநிலத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும். கோழி தீவனம் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் காலியாக வரும், வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னரே, மாநில எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us