தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பிரியாணி மேளா அ.தி.மு.க., பிரமுகர் தாராளம்

பிரியாணி மேளா அ.தி.மு.க., பிரமுகர் தாராளம்

பிரியாணி மேளா அ.தி.மு.க., பிரமுகர் தாராளம்


ADDED : மார் 04, 2024 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம் : நாமக்கல் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், பரமத்தி வேலுாரை சேர்ந்த, வர்த்தக அணி செயலர் தமிழ்மணி வேட்பாளராக பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

சமீபத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொல்லிமலையில் கலைத் திருவிழாவாக நடந்தது. இதற்கான முழு செலவையும், தமிழ்மணியே ஏற்றார். அதேபோல, நாமக்கல் அடுத்த சாலப்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவிலும், உணவுக்கு ஏற்பாடு செய்தார்.

நேற்று ராசிபுரத்தில் 'பிரியாணி மேளா' நடத்தப்பட்டது. பிரியாணி நன்றாக செய்பவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இசை நாற்காலி, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்மணி பரிசு வழங்கினார். மக்களுக்கும் பிரியாணி விருந்தும் வைத்துள்ளார்.

நாமக்கல் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வேட்பாளராக்கப்படுவோம் என்ற நம்பிக்கையிலேயே இப்படி வித்தியாசமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி பணத்தை தண்ணீராக இரைத்து வருகிறார் தமிழ்மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us