தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., நீடிக்கிறது: சவுமியா தகவல்

பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., நீடிக்கிறது: சவுமியா தகவல்

பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., நீடிக்கிறது: சவுமியா தகவல்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 08:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: “பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., நீடிக்கிறது,” என பா.ம.க., -–எம்.எல்.ஏ., சவுமியா தெரிவித்தார்.

திருநெல்வேலியில், குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை சவுமியா பார்வையிட்டார். பின், அவர் அளித்த பேட்டி:

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், 27 இடங்களில் திடக்கழிவுகளும் ரசாயன கழிவுகளும் கலக்கின்றன. குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவும் நிலையில், குளிர்பான ஆலைகளுக்கு ஆற்று நீரை அனுப்புவது வேதனை.

கழிவுநீர் கலப்பதை தடுக்க, நவீன சுத்திகரிப்பு நிலையங்களை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த, பல கோடி ரூபாய் அபராதத்தை, உடனடியாக வசூலித்து ஆற்றை சீரமைக்க பயன்படுத்த வேண்டும்.

ஜெர்மன் நிதி உதவியாக பெறப்பட்ட ரூ.59 கோடியை, ஆற்றங்கரை படித்துறைகள், மண்டபங்களை சீரமைக்க பயன்படுத்த வேண்டும். இதற்காக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு திட்டங்களுடன் கூடிய கடிதங்கள் வழங்கியுள்ளேன்.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., நீடிக்கிறது; அக்கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. இடைத்தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துமாறு, பா.ம.க., தலைவர் அன்புமணி ஆலோசனை கூறினார். அதை ஏற்காததால், யாருக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவை, பா.ம.க., எடுத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us