பா.ஜ., கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இன்று அறிவிப்பு
பா.ஜ., கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இன்று அறிவிப்பு
ADDED : மார் 19, 2024 11:20 PM
சென்னை:தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில், த.மா.கா., புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன.
அந்த கூட்டணியில், அ.ம.மு.க., மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கடந்த வாரம் இணைந்தன. பா.ம.க., நேற்றுஇணைந்தது.
பா.ஜ., -- பா.ம.க.,வுக்கு, 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று கையெழுத்திட்டனர்.
மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு செய்வதற்காக, சென்னை கமலாலயத்தில், பா.ஜ, முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடந்தது. அதில், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், அ.ம.மு.க., மற்றும் பன்னீர்செல்வத்தின் உரிமை மீட்புக் குழுவிற்கான தொகுதிப் பங்கீடு இன்று நடக்க உள்ளது.

