/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு
/
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADDED : மார் 22, 2026 03:53 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணியில், பா.ஜ.,விற்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, பா.ஜ., நேற்று வெளியிட்டது.
புதுச்சேரியில், நீண்ட இழுபறிக்கு பின், தே.ஜ., கூட்டணியில் நேற்று முன்தினம் தொகுதி பங்கீடு உறுதியானது.
மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்., - 16; பா.ஜ., - 10; அ.தி.மு.க., - 2; லட்சிய ஜனநாயக கட்சி - 2 என ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என்ற ஒதுக்கீடு நேற்று முடிவானது.
அதன்படி, பா.ஜ.,விற்கு மண்ணாடிப்பட்டு, ஊசுடு (தனி), காலாப்பட்டு, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, திருநள்ளாறு, நிரவி, காரைக்கால் (வடக்கு) மாகி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ., நேற்று வெளியிட்டது. மண்ணாடிப்பட்டு தொகுதியில் தற்போதைய பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.