பிரதமர் மோடி பிறந்த நாள் விழா; பா.ஜ.,வில் குழு அமைப்பு
பிரதமர் மோடி பிறந்த நாள் விழா; பா.ஜ.,வில் குழு அமைப்பு
ADDED : ஆக 25, 2025 04:07 AM
சென்னை: 'பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, வரும் செப்., 17 முதல் அக்., 2 வரை, 'சேவை இரு வாரம்' நிகழ்ச்சியை நடத்தி கொண்டாட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் மோடியின் பிறந்த நாள் செப்., 17ல் கொண்டாடப்படுகிறது. ஏழைகளின் நலன் மற்றும் அவர்களுக்கான தேவையை அறிந்து, பல வரலாற்று சிறப்பு மிக்க, மக்கள் நலப்பணிகள், பிரதமர் மோடி தலைமையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும், அவரது பிறந்த நாளான செப்., 17 முதல் அக்., 2 வரை, பல்வேறு மக்கள் நலப் பணிகளை, பா.ஜ., சார்பில் செய்து வருகிறோம். இந்த ஆண்டும், 'சேவை இரு வாரம்' என்ற தலைப்பில், மோடியின் பிறந்த நாள், கொண்டாடப்படுகிறது.
பணிகளை ஒருங்கிணைக்க, பா.ஜ., மாநில செயலர் வினோஜ் தலைமையில், மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.