sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துவக்க பள்ளியில் இரவில் மது அருந்தும் அவலம் பா.ஜ., புகார்

/

துவக்க பள்ளியில் இரவில் மது அருந்தும் அவலம் பா.ஜ., புகார்

துவக்க பள்ளியில் இரவில் மது அருந்தும் அவலம் பா.ஜ., புகார்

துவக்க பள்ளியில் இரவில் மது அருந்தும் அவலம் பா.ஜ., புகார்


ADDED : ஜன 09, 2025 10:45 PM

Google News

ADDED : ஜன 09, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''இந்த ஆட்சியில் தான் எங்கு பார்த்தாலும் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

பா.ஜ., - சரஸ்வதி: ஈரோடு, கொடுமுடி நகப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 216 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

பள்ளியில் வகுப்பறைகள் போதுமான அளவில் இல்லை. மரத்தடியிலும், பள்ளி வராண்டாவிலும், ஆய்வகத்திலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

எனவே, நான்கு வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். நகப்பாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் போதுமான கழிப்பறைகள் இல்லை.

மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நகப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவைப்படுகிறது.

அது இல்லாத காரணத்தால், மதுப்பிரியர்கள் இரவு நேரங்களில் பள்ளியின் உள்ளே வந்து மது அருந்தி விட்டு, பாட்டில்களை அங்கேயே உடைத்து செல்கின்றனர். பாதுகாப்பற்ற நிலை உள்ளது.



அமைச்சர் மகேஷ்: அந்த பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள் கட்டித் தரப்படும்.

அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக, 3,497 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில், இதுவரை 7,556 வகுப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

மேலும், 6,353 வகுப்பறைகள், 351 ஆய்வகங்கள், 350 கழிப்பறைகள் கட்டப்படுகின்றன.

இந்த ஆட்சியில் தான் எங்கு பார்த்தாலும் பள்ளி கட்டடங்கள் கட்டி கொண்டிருப்பதை, எம்.எல்.ஏ.,க்கள் பார்க்கின்றனர்.

வரும் காலங்களில் எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் இடங்களில் வகுப்பறைகள் உள்ளிட்ட பள்ளி கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us