உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 08, 2024 02:12 AM

அ நிறம் | அளவு
சென்னை:தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, பார்லிமென்டில் நேற்று முன்தினம், மத்திய இணை அமைச்சர் முருகனை, 'தகுதியற்றவர்' என்று விமர்சித்து பேசினார். இதற்கு, பா.ஜ.,வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ., மாநில பட்டியல் அணி பொது செயலர் நாகராஜ் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள், டி.ஆர்.பாலு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னையில் உள்ள தேசிய ஆதி திராவிடர் நல ஆணையத்தில், நேற்று புகார் மனு அளித்தனர்.
