ADDED : ஆக 12, 2025 04:03 AM
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
முதல்வர் ஸ்டாலினின், 'ரோடு ஷோ' காரணம் காட்டி, உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்தையே மாற்றி, தொலைவில் ஒரு குப்பை மேட்டில், தற்காலிக பஸ் நிலையம் அமைத்து, மக்களை அவதிக்குள்ளாக்கி உள்ள தி.மு.க., அரசுக்கு கண்டனம்.
தமிழகத்தின் பல பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு, வெறும் விளம்பர அரசியலுக்காக, தெருவில் இறங்கி தரிசனம் காட்டும் முதல்வரின் தேர்தல் உத்திக்காக, வியர்க்க விறுவிறுக்க பஸ் நிலையத்தை தேடி, மக்கள் எதற்கு அலைய வேண்டும்.
முன் அறிவிப்பு இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையை திறந்துவிட்டு, மொத்த ஊரையும் வெள்ளத்தில் மிதக்க விட்ட, இந்த அலங்கோல அரசு எதைத்தான் ஒழுங்காக செய்துள்ளது.
தொடர்ந்து மக்கள் நலனை கிள்ளுக்கீரையாக பிய்த்து எறிந்து வரும், இந்த அராஜக தி.மு.க., ஆட்சியை, மக்கள் துாக்கி எறியும் நாள் வெகு துாரமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.