மூன்றாவது இடத்துக்கு பா.ஜ., போட்டி போடுகிறது: கனிமொழி பேச்சு
மூன்றாவது இடத்துக்கு பா.ஜ., போட்டி போடுகிறது: கனிமொழி பேச்சு
ADDED : மார் 29, 2024 11:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ‛‛ தமிழகத்தில் பா.ஜ., மூன்றாவது இடத்திற்கு தான் போட்டியிடுகிறது '' என தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசினார்.
கோவை மாவட்டம், துடியலூரில் கனிமொழி எம்.பி., லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், இதுவே கடைசி தேர்தலாக இருக்கும். பா.ஐ., ஆட்சி செய்யாத மாநிலங்களை ஓரவஞ்சனையாக மத்திய அரசு நடத்துகிறது.
தமிழக மக்களுக்காக, பல்வேறு அரசு நல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, வெற்றி பெறலாம் என, பா.ஜ. நினைக்கிறது அது ஒருபோதும் நடக்காது. பா.ஜ., இங்கு மூன்றாவது இடத்துக்கு தான் போட்டி போடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

