நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம்: பா.ஜ., கோரிக்கை
நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம்: பா.ஜ., கோரிக்கை
ADDED : அக் 24, 2025 01:16 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால், குறுவை சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட, 8,000 டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன.
அறுவடை செய்து, 10 நாட்களாகியும், நெல் கொள்முதல் செய்யாமல், விவசாயிகளின் உழைப்பை உதாசீனப்படுத்தும் தி.மு.க., அரசின் ஆணவம், கடும் கண்டனத்திற்குரியது.
அலட்சிய போக்குடன் செயல்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த, 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிரை தண்ணீரில் மிதக்கவிட்டு, தி.முக., அரசு விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
எனவே, 'நானும் டெல்டாக்காரன் தான்' என வெற்று விளம்பர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின், அறுவடை செய்யப்பட்ட நெல்லை போர்க்கால அடிப் படையில் உடனே கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பாதிப்புக்குள்ளான நெற்பயிருக்கு, ஏக்கருக்கு 50,000 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

