sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மன அழுத்தம்... தோட்டக்கலைத் துறை குறித்த அரசாணையை திரும்பப் பெற அண்ணாமலை வலியுறுத்தல்

/

மன அழுத்தம்... தோட்டக்கலைத் துறை குறித்த அரசாணையை திரும்பப் பெற அண்ணாமலை வலியுறுத்தல்

மன அழுத்தம்... தோட்டக்கலைத் துறை குறித்த அரசாணையை திரும்பப் பெற அண்ணாமலை வலியுறுத்தல்

மன அழுத்தம்... தோட்டக்கலைத் துறை குறித்த அரசாணையை திரும்பப் பெற அண்ணாமலை வலியுறுத்தல்


ADDED : டிச 22, 2025 02:30 PM

Google News

ADDED : டிச 22, 2025 02:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தோட்டக்கலைத் துறையின் தனித்துவம், நிபுணத்துவம் மற்றும் செயல்திறனை குலைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசுக்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; திமுக அரசு வெளியிட்டுள்ள உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 (UATT 2.0) தொடர்பான அரசாணைகள் எண் 252 மற்றும் 288, “கள அலுவலர் ஒருங்கிணைப்பு” என்ற பெயரில், தோட்டக்கலைத் துறையின் தனித்துவம், நிபுணத்துவம் மற்றும் செயல்திறனை குலைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, இன்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்டக்கலை சாகுபடி பரப்பு 13.5% மட்டுமே என்றாலும், உற்பத்தி மதிப்பில் 30.5% மற்றும் தமிழக வேளாண் ஏற்றுமதியில் 58-60% பங்கு. இத்தகைய உயர் மதிப்புத் துறைக்கு தனி நிர்வாகமும் துறைசார் நிபுணத்துவமும் அவசியம். ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே அலுவலருக்கு பல துறைத் திட்டங்களை ஒப்படைப்பது, நிர்வாக குழப்பத்தையும் செயல்திறன் குறைவையும் உருவாக்கும்.

தற்போது தமிழக தோட்டக்கலைத் துறையில், தொழில்நுட்ப அலுவலர்கள் பலருக்கு முன் அறிவிப்பு இன்றி, தொலைதூர மாவட்டங்களுக்கு அவசர பணியிட மாற்ற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் கடுமையான பொருளாதார சுமை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அவர்களது குழந்தைகளின் கல்வித் தொடர்ச்சியும், எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 1000 தோட்டக்கலை பட்டதாரிகள் உருவாகின்றனர். இந்தத் துறையின் தனித்துவம் குலைந்தால், வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, திறன் முதலீடு ஆகியவை நீண்டகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, விவசாயிகள் நலன், உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி திறன், துறை அலுவலர்களின் குடும்ப நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, UATT 2.0 - அரசாணைகள் எண் 252 & 288 உடனடியாக முழுமையாக ரத்து செய்வதோடு, தோட்டக்கலை அலுவலர்களுக்கான அவசர இடமாற்ற ஆணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், தோட்டக்கலைத் துறை அதன் தனித்துவம் மற்றும் துறைசார் நிபுணத்துவத்துடன் தனித்துறையாக தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us