தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு பதிவிட்ட பா.ஜ., நிர்வாகி கைது

 சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு பதிவிட்ட பா.ஜ., நிர்வாகி கைது

 சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு பதிவிட்ட பா.ஜ., நிர்வாகி கைது


ADDED : பிப் 01, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 03:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் அவதுாறு தகவல் பரப்பியதாக கூறி, தமிழக பா.ஜ., சமூக ஊடக மாநில செயலர் பிரவீன்ராஜ் என்பவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ், 28. பா.ஜ., சமூக ஊடக செயலராக உள்ள இவர், 'சங்கி பிரின்ஸ்' என்ற பெயரில், சமூக ஊடகத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தமிழகத்தில், வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பியதாக கூறி, அவர் மீது புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், பரங்கிமலை சைபர் கிரைம் போலீசார், பிரவீன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புல் அவுட்: தி.மு.க., ஆட்சி துாக்கியெறியப்படும்! வட மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூர சம்பவம் குறித்து, 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட தமிழக பா.ஜ.,வின் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன்ராஜை, தி.மு.க.,வின் ஏவல் துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது; தமிழக பா.ஜ., அவருக்கு துணை நிற்கும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு, எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என்று, தினமும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதை கண்டுகொள்ளாமல், சமூக வலைதளத்தில் பதிவிடுவோரை மட்டும் கைது செய்யும் தி.மு.க., ஆட்சி விரைவில் துாக்கியெறிப்படும். நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us