பா.ஜ., நீதி கேட்பு பேரணிக்கும் போலீஸ் அனுமதி மறுப்பு!
பா.ஜ., நீதி கேட்பு பேரணிக்கும் போலீஸ் அனுமதி மறுப்பு!
UPDATED : ஜன 02, 2025 12:41 PM
ADDED : ஜன 02, 2025 12:40 PM

மதுரை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு பா.ஜ., சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மதுரை செல்லாத்தம்மன் கோவிலில் இருந்து சென்னை வரை பா.ஜ., சார்பில் நீதி கேட்பு பேரணி நடத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேரணியை பா.ஜ., பிரமுகர் குஷ்பு தொடங்கி வைக்க உள்ளார். எனவே, இந்தப் பேரணிக்கு அனுமதி கேட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் போலீஸில் மனுவும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பா.ஜ.,வின் நீதி கேட்பு பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இது பா.ஜ.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. ஏற்கனவே, இன்று நடக்கவிருந்த பா.ம.க., பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பா.ஜ.,வின் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போலீசார் அனுமதி தராவிட்டாலும், தடையை மீறி பேரணியை நடத்துவோம் என்று பா.ஜ.,வினர் அறிவித்துள்ளனர். இதனால், பரபரப்பு நிலவி வருகிறது.