வேலுமணி மகன் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய பா.ஜ., தலைவர்கள்
வேலுமணி மகன் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய பா.ஜ., தலைவர்கள்
ADDED : மார் 03, 2025 12:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லத்திருமண விழாவில் பா.ஜ., தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., சட்டசபை கொறடாவுமான வேலுமணியின் மகன் விஜய் விகாஸ்- தீக்சனா திருமணம் இன்று நடந்தது.
இதில், உறவினர்கள், நண்பர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.