sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பகுதி நேர ஆசிரியரின் தற்கொலை முடிவு ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி; நயினார் நாகேந்திரன்

/

பகுதி நேர ஆசிரியரின் தற்கொலை முடிவு ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி; நயினார் நாகேந்திரன்

பகுதி நேர ஆசிரியரின் தற்கொலை முடிவு ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி; நயினார் நாகேந்திரன்

பகுதி நேர ஆசிரியரின் தற்கொலை முடிவு ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி; நயினார் நாகேந்திரன்


ADDED : ஜன 14, 2026 09:58 PM

Google News

ADDED : ஜன 14, 2026 09:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; பகுதி நேர ஆசிரியரின் தற்கொலை முடிவு ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

அவரது அறிக்கை;

பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து 6வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் என்பவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.

'உங்க கனவ சொல்லுங்க' என விளம்பர நாடகம் போடும் முதல்வர் ஸ்டாலின் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடிய ஆசிரியர் கண்ணன் வாழ்நாள் கனவிற்கு செவிமடுக்காமல் போனதன் விளைவு தான் இந்த துர்மரணம். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சிக்கு வந்தவுடன் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாகப் போலி வாக்குறுதியளித்த திமுகவினை நம்பி இத்தனை ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர் கண்ணன் , இறுதியில் தற்கொலை முடிவை எடுத்திருப்பது ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி. திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு நம்மில் ஒருவரை மீண்டுமொருமுறை நாம் இழந்திருக்கிறோம்.

இப்படிப்பட்ட கொடூர ஆட்சியை ஒழித்தால் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் அகால மரணமடைந்த அப்பாவி ஆன்மாக்கள் சாந்தியடையும்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us