சென்னை வந்தார் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: பாதயாத்திரையில் பங்கேற்பு
சென்னை வந்தார் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: பாதயாத்திரையில் பங்கேற்பு
UPDATED : பிப் 11, 2024 07:07 PM
ADDED : பிப் 11, 2024 06:02 PM

சென்னை: சென்னை வந்த பா.ஜ., தேசிய தலைவர் நட்டா. அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பங்கேற்றார்.
தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறியது. பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்ற முடிவை அறிவிக்காமல் உள்ளன. இந்நிலையில், பா.ஜ., உடன் போட்டியிடும் கூட்டணி கட்சிகளை இறுதி செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்காக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலை ஆடிட்டோரியத்தில் நடக்கும், பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என, 4,000 பேர் பங்கேற்கின்றனர். இதன்பின் பா.ஜ., அணிக்கு வர உள்ள கட்சி தலைவர்களுடன், நட்டா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதயாத்திரையில் நட்டா
சென்னைவந்த பா.ஜ., தேசிய தலைவர் ஜெ..பி..,நட்டா சவுகார் பேட்டையில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் பாதயாத்திரையில் பங்கேற்றார். அவருடன் மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

