ADDED : ஜூன் 30, 2025 09:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: தி.மு.க., -எம்.பி., ராஜா 1.26 லட்சம் கோடி ஊழல் வழக்கில் திகார் ஜெயிலில் இருந்தவர். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாகரிகமற்ற முறையில் பேசியது கண்டிக்கத்தக்கது.
அவர் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு நடந்து வருகிறது. அருவருப்பாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள ராஜா போன்றோரின் சுய ரூபத்தை மக்களுக்கு எடுத்துகாட்டும் விதம் சென்னையில் ஏழு இடங்களில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.