சட்டம் - ஒழுங்கு சீர்கேடு பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு
ADDED : நவ 14, 2024 09:19 PM
நிலக்கோட்டை:''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது,'' என, பா.ஜ., ஒருங்கிணைப்புக்குழு தலைவர், ஹெச் ராஜா கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது. அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டிய இடத்தில் பா.ஜ., இருக்கிறது. பள்ளி சென்று வரும் குழந்தைகளின் புத்தக பையை சோதனையிட்டு, ஏதாவது போதை பொட்டலம் இருக்கிறதா என சோதிக்க வேண்டிய இக்கட்டில் நாம் இருக்கிறோம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நாடு முழுதும் பசுவதை தடை இருக்கிறது. தமிழகத்தில் பசுவதையை அனுமதிக்க எந்த அரசும் சட்டம் இயற்றவில்லை. எனவே, இங்கு மாடுகளை வெட்ட முடியாது.
ஆனால், இடதுசாரிகளால் கேரளா, மேற்கு வங்கத்தில் விதிவிலக்குப் பெற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில் மாட்டிறைச்சி விற்றால், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.