UPDATED : அக் 12, 2026 08:17 PM
ADDED : அக் 12, 2026 08:14 PM
திருச்சி: திருச்சியில், தாசில்தார் அலுவலக பெண் பணியாளரை, அநாகரிகமாக பேசிய பா.ஜ., பிரமுகரை கண்டித்து, வருவாய் துறை பணியாளர்கள், காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன், திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகம் சென்ற பா.ஜ., மாநில இளைஞர் அணி நிர்வாகியும், திருச்சி மாநகராட்சி ஒப்பந்ததாரருமான கவுதம் என்பவர், தாசில்தார் அலுவலக பெண் பணியாளரை அநாகரிகமான வார்த்தைகளால் பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.
‘தாசில்தார் அலுவலக பெண் பணியாளரை, பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்த பா.ஜ., நிர்வாகியை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் -– 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து, நேற்று, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
