பொன்முடிக்கான தண்டனை போதாது பா.ஜ., கடும் எதிர்ப்பு
பொன்முடிக்கான தண்டனை போதாது பா.ஜ., கடும் எதிர்ப்பு
ADDED : ஏப் 13, 2025 03:01 AM

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமான சையத் ஜாபர் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள தி.மு.க., என்ற அரசியல் கட்சி முற்றிலுமாக அம்பலப்பட்டு நிற்கிறது. தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, தீவிரமான, ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை கூறியுள்ளார். மிகவும் அருவருக்கத்தக்க அவரது ஆபாச கருத்துகள், சைவ மற்றும் வைணவ மத நம்பிக்கை உள்ளவர்களை புண்படுத்துவதாக உள்ளது.
மேலும், ஹிந்தி பேசும் மக்களை, அவர் 'பானிபூரி விற்பவர்கள்' என்று, கேவலமாக பேசுவதையும் ஏற்க முடியாது. சனாதான தர்மத்திற்கு, அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில், திரும்ப திரும்ப அவர் பேசி வருவது, ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தனை, கீழ்த்தரமான கருத்துகளை தெரிவித்துள்ள போதிலும், பொன்முடிக்கு எதிராக, கடுமையான ஒழுங்கு நடவடிக்கையை தி.மு.க., எடுக்கவில்லை. இது, மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-நமது டில்லி நிருபர்-

