ADDED : அக் 25, 2025 06:24 AM

திராவிட கட்சிகளை ஒழிப்பதே பா.ஜ., எண்ணம் திருமாவளவனுக்கு எதிராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராகவும் விமர்சனம் செய்தால், வி.சி.,க்கள் கோபப்படுவர். அதனால், மோசமான விளைவுகள் ஏற்படலாம். அதை வைத்து, வி.சி.,க்கள் மீது தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கும். இதையடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு, கூட்டணி உறவு சிதையும் என கணக்கு போட்டு சிலர் காய் நகர்த்துகின்றனர். அதெல்லாம் ஒரு போதும் நடக்காது. ஏனென்றால், நாங்கள் ஈ.வெ.ரா., அம்பேத்கர், காரல் மார்க்ஸ் கொள்கையை பின்பற்றி வருகிறோம். அதே கொள்கையை தான் தி.மு.க.,வும் பின்பற்றி வருகிறது. அதனால், என்ன சூழ்ச்சி செய்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள உறவை பிரிக்க முடியாது. உணர்வால், உள்ளத்தால் இரு கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. எதிரிகள் சூழ்ச்சியை இரு கட்சியினரும் உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பா.ஜ.,வின் எண்ணம், தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை உருவாக்குவது. அதை, இரு திராவிட கட்சிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள்

