ADDED : நவ 17, 2025 01:22 AM

பீஹாரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டதால், பா.ஜ., கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தமிழகத்திலும், சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி 200 தொகுதியில் வெற்றி பெறும். எதிர்கட்சியாக இருந்தபோது, 'இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்' என பேசிய தி.மு.க., - எம்.பி., கனிமொழி, இப்போது, அதுபற்றி வாய் திறப்பதே இல்லை.
டாஸ்மாக் வாயிலாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய், தி.மு.க., அரசுக்கு வருமானம் வருகிறது. இது தவிர, கள்ளச்சாராயம் வேறு.
அ.தி.மு.க.,வினரை அடிமைகள் என துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். தி.மு.க.,வில் தான், அமைச்சர்கள் அடிமைகளாக இருக்கின்றனர்.
உதயநிதி அடுத்த முதல்வராக வர மாட்டார் என தி.மு.க., அமைச்சர்களால் கூற முடியுமா? பா.ஜ., ஆட்சியில் தான், தமிழகத்தில் தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டது. துாத்துக்குடி விமான நிலையம், 450 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
-- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

