அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன்; புத்தக கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் பதிவு
அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன்; புத்தக கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் பதிவு
ADDED : நவ 16, 2025 06:15 PM

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அவர் 60க்கும் மேற்பட்ட நூல்களை வாங்கியதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை: அறிவுத்திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம். வள்ளுவர் கோட்டத்தில் புத்தக கண்காட்சியில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.
குறிப்பாக, 'Carry on, but remember' எனும் அண்ணாதுரை பார்லிமென்டில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும், அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன்.
என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன். வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள உதயநிதி மற்றும் திமுகவினருக்கு மீண்டுமொரு முறை எனது பாராட்டுகள். வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

