பா.ஜ.,வின் திட்டங்கள் மிகவும் மோசமானவை ,மிகவும் ஆபத்தானவை: ஸ்டாலின்
பா.ஜ.,வின் திட்டங்கள் மிகவும் மோசமானவை ,மிகவும் ஆபத்தானவை: ஸ்டாலின்
UPDATED : ஏப் 06, 2024 08:48 PM
ADDED : ஏப் 06, 2024 08:30 PM

சிதம்பரம்: பா.ஜ.,மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. பா.ஜ.,மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பதவியில் இருப்பது பிரதமரா அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரரா, என்ற சந்தேகம் வரும் அளவிற்கு இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சிதம்பரம்தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் சுதா ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசினார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முதல்வர் பேசியதாவது: மொழிக்கும் இனத்திற்கும் ,நாட்டிற்கும் பிரச்னை என்றால் கேட்கும் முதல் குரல் திருமாவளவன் குரலாகத்தான் இருக்கும். போராட்டகளத்திற்கு முதலில்வரும் நபரான திருமாவளவனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். கருணாநிதியால் மேஜர் ஜெனரல் என பாராட்டப்பட்டவர் திருமாவளவன்.
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு இருப்பதற்கு காரணம் திமுக தான் . தமிழ்நாட்டில் இரண்டு தலைமுறைகளாகத்தான் டாக்டர்கள் இன்ஜினியர்கள் போன்றவர்கள் வருகிறார்கள் அது மோடிக்கு பிடிக்கவில்லை. இட ஒதுக்கீட்டை பார்த்து எரியுதடி மாலா பேனை போடு என்பதை போல பா.ஜ., நினைக்கிறது. இட ஒதுக்கீடு காரணமாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற்று உயர்பதவிக்கு வந்துள்ளனர்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பகையாளி இந்தியாவாக மாற்ற நினைக்கும் பிரதமர் நமக்கு தேவையில்லை தேசத்தின் பன்முக தன்மையை மாற்ற நினைக்கும் பிரதமர் மோடி மீண்டும் வேண்டாம். மருந்துக்கு கூட மதசார்பின்மை பற்றி பேசதாவர் பிரதமர் மோடி. பா.ஜ.,வுடன் பாமக வைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டு. இண்டியா கூட்டணி சமூகநீதி அடிப்படையில் அமைந்துள்ள கொள்கை கூட்டணி. சமூக நீதி தான் இன்றைய தேவை.
கவர்னர்களை வைத்து போட்டி அரசாங்கத்தை பா,ஜ. நடத்தும். மக்கள் பிளவுபடுத்தப்படுவார்கள் ஒடுக்கப்படுவோர் உயர் பதவிக்கு வருவது பா.ஜவின் கண்களை உறுத்துகிறது. வளர்ச்சி நோக்கி இந்தியாவை உருவாக்க இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பா.ஜ.,வின் திட்டங்கள் மிகவும் மோசமானவை ,மிகவும் ஆபத்தானவை, பா.ஜ.,மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. பா.ஜ.,மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பதவியில் இருப்பது பிரதமரா அல்லது ஆர்.எஸ்.எஸ்காரரா. என்ற சந்தேகம் வரும் அளவிற்கு இருக்கும்.
வாஷிங்மெஷின் கேரண்டி பிரதமர்
பா.ஜவினரால் தயாரிக்கப்பட்டவாஷிங்மெஷினை பிரதமர் மோடி வாங்கி உள்ளார். வாஷிங்மெஷின் உள்ளே போகும் எதிர்கட்சியினர் ஊழல் எல்லாம் நீக்கப்பட்டு தூய்மையாக்கப் படுவர்.வாஷிங்மெஷினைதான் கேரண்டி கேரண்டி என பிரதமர் மோடி சொல்லிக்கொண்டு வருகிறார். ஊழலில் சிக்கியவர்கள் பா.ஜ.,வில் சேர்ந்ததும் காப்பற்றப்பட்டது பற்றி செய்திகள் கூட வெளியாயின. உலகளவில் இந்தியாவிற்கு அழிக்க முடியாத அவமானத்தை கொடுத்துள்ளது தேர்தல் பத்திர ஊழல்.
திமுகவிற்கு எதிராக இ,பிஎஸ் பேசி வருகிறார் சொல்லக்கூசும் பொய்களை கூட கூசாமல் கூறி வருகிறார் இ,.பி.எஸ்,.அதிமுகவில் உழைத்து உயர்ந்தேன் என இபிஎஸ் பொய்சொல்லி வருகிறார். பழனிசாமியின் பொய்களை புயல் காற்றில் உட்கார்ந்து பொரி சாப்பிடுபவர் நம்புவர்.சிலர் முதுகிலே சவாரி செய்து பதவி வாங்கியவர் தான் இபிஎஸ் அதிமுகவில் அதிகமாக கப்பம் கட்டுபவர்கள் மட்டுமே உயர்பதவிக்கு வரமுடியும். அதிமுக என்ற கட்சியை ஏலத்தில் எடுத்துள்ளார் பழனிசாமி. அதிமுகவை மொத்த லீசுக்கு பா.ஜ.,விடம் கொடுத்துவிட்டு பா.ஜ.,வின் பீ டீமாக செயல்படுகிறார் இ.பி.எஸ்.,
வரலாறு எதுவும் தெரியாமல் பேசும் இ,பிஎஸ் நாவடக்கத்துடன் பேச வேண்டும். ஊர்ந்தே முன்னறேியவர் இ,பி,எஸ் .பிரதமர் மோடி அமைத்துகொடுத்ததிட்டத்தையே இந்த தேர்தலில் இ.பிஎஸ் நிறைவேற்றி வருகிறார். கடைசி விவசாயி என்பது போல் பேசும் இ.பி.எஸ் தான் விவசாயிகளுக்கு எதிரானவர். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 3 வேளாண் சட்டங்களை இபிஎஸ் ஆதரித்தார்.
கதற விடவே வந்துள்ளார் உதயநிதி
உதயநிதி அரசியலுக்குவந்ததால் என்ன லாபம் என இ,பி.எஸ் பேசிவருகிறார். திராவிடம் பற்றி தெரியாத உங்களைபோன்றவர்களை கதற விடவே உதயநிதி வந்துள்ளார். உதயநிதி அரசியலுக்கு வந்ததை பற்றி பழனிசாமி பேசுகிறார். கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று கூறும் அளவுக்கு பொது அறிவை வைத்துக் கொண்டு இதெல்லாம் நமக்கு தேவையா பழனிசாமி?
இந்த தேர்தலுக்கு உங்க திட்டம் என்ன? பா.ஜ.,,வுக்கு எதிரான ஓட்டுகளை பிரிக்கத்தான் தனியாக நிக்கிறீங்க! அண்ணா படத்தை கொடியில் வைத்துக்கொண்டு, கட்சி பெயரில் இருக்கும் திராவிடம் என்பது என்னவென்று விளக்கம் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டு நிற்கிறார்
அரசியல் அமாவாசை இ.பி.எஸ்
மோடி மீது தனக்குள்ள பயத்தை மறைக்க இன்னும் 24 அமாவாசை உள்ளது என்கிறார். காலையில் எழுந்தவுடன் தேர்தலுக்கு இன்னும் எத்தனை அமாவாசை உள்ளது என கணக்கு போடும் இ,பிஎஸ் இந்தியாவின் அமாவாசை
தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் துரோகம் செய்தஇ.பி.எஸ் தான் அரசியல் அமாவாசைமயிலாடுதுறை -தரங்கம்பாடி இடையேயான ரயில்பாதை சீரமைக்கப்பட்டு காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரியலுார் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர்ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
பா.ஜ.,வை வீழ்த்த தேர்தல் வியூகம் வகுத்து தர்மயுத்தம் நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். தற்போது நடைபெற உள்ள தேர்தல் வாழ்வுரிமைக்கான போர் தர்மயுத்தம், அறப்போர். பிரதமர் பார்த்து பயப்படும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இந்தியா ஜனநாயகம் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறோம். ஜனநாயகத்தை மீட்கவேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் பா.ஜவை எதிர்கிறது தி.மு.க,
பா,ஜ.,வுடன் திமுக நட்பு பாராட்டி இருந்தால் அதிமுக என்ற ஒரு கட்சியே இருந்திருக்காது. செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றிருக்க மாட்டார்.தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக உள்ளார் முதல்வர் ஸ்டாலின். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் பாசிச பா.ஜ.வை வீழ்த்தும் வியூகத்தை ஸ்டாலின் பார்த்துக்கொள்வார். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

