தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பத்திரிகைகள் மீது குற்றம் சொல்வதா? அமைச்சர்களுடன் தி.மு.க., வாதம்!

 பத்திரிகைகள் மீது குற்றம் சொல்வதா? அமைச்சர்களுடன் தி.மு.க., வாதம்!

 பத்திரிகைகள் மீது குற்றம் சொல்வதா? அமைச்சர்களுடன் தி.மு.க., வாதம்!


ADDED : ஆக 26, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பத்திரிகைகள் மீது குற்றம்சாட்டிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்ததால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - ஆஸ்டின்: கடந்த 13ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டை, த.வெ.க., அரசு நடத்தியது. கடந்த மூன்று மாதங்களில், கர்நாடகா, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளன. ஆனால், தமிழகத்தில் முதலீடுகள் சரிந்துள்ளன.

அமைச்சர் கீர்த்தனா: காசு கொடுத்தால் எதையும் எழுதும், ஒரு பத்திரிகையில் வந்த தவறான செய்தியை கூறுகிறார். மூன்றே மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.

இங்கே பேசுவதை, முதலீட்டாளர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். எனவே, அரசியல் பார்க்காமல், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

தி.மு.க., - எ.வ.வேலு: ஜனநாயகத்தின் நான்காவது துாணாக உள்ள பத்திரிகைகளை, கொச்சைப்படுத்தும் வகையில், அமைச்சர் பேசுவது சரியல்ல.

தி.மு.க., - தங்கம் தென்னரசு: அரசின் செயல்பாடுகள் பற்றி, மூன்றாவது கண்ணாக இருந்து விமர்சிக்கும் பத்திரிகைகளை, காசு வாங்கிக் கொண்டு எழுதுகின்றனர் என, பொத்தாம் பொதுவாக பேசுவது அழகல்ல.

அமைச்சர் நிர்மல் குமார்: அனைத்து பத்திரிகைகளையும் அமைச்சர் சொல்லவில்லை. ஒரு சில பத்திரிகைகளையே குறிப்பிட்டார். முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தைப் பற்றி தவறான எண்ணம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே, அமைச்சர் கூறினார்.

சபாநாயகர் பிரபாகர்: பத்திரிகையில் வரும் செய்திகளின் அடிப்படையில், சட்டசபையில் விவாதிக்கக்கூடாது என, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பேசியுள்ளனர். அதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us