தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கனிமவள கொள்ளை குறித்து விசாரணை

 கனிமவள கொள்ளை குறித்து விசாரணை

 கனிமவள கொள்ளை குறித்து விசாரணை


ADDED : ஆக 26, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டசபையில் நடந்த விவாதம்:

பா.ம.க., கணேஷ்குமார்: கனிமவளங்களை நேரடியாக அரசே விற்பனை செய்தால், 1.50 லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் கிடைக்கும். இவற்றால் அரசின் கடன் சுமை, நிதிநிலை சீராகும்.

அமைச்சர் பிரபு: கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய, நிரந்தர தடை விதிக்க, சட்டத்தில் இடமில்லை. கனிமங்களை விற்பனை செய்தால், 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்காது.

பா.ம.க., கணேஷ்குமார்: 2025 - 26ல், திருநெல்வேலியில், 53 கல் குவாரிகள் விதிகளை மீறியதாக கண்டறியப்பட்டன. அவற்றுக்கு, 262 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சில நாட்களில் அபராதம் விதித்த அதிகாரி மாற்றப்பட்டதுடன், அபராத தொகை 13.08 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. அதையும் மாத தவணையில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் பிரபு: கடந்த ஆட்சிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக, குழு அமைத்தும் விசாரணை நடத்தப்படும்.

குவாரிகளில், நிறைய இடங்களில், 'எம்.சாண்ட்' போட்டு மறைப்பதாக தெரிய வருகிறது. ஆனாலும், கண்டுபிடித்து விடலாம். கிராவல் மண்ணை பொறுத்தவரை, ஒரு மழை பெய்தால், எவ்வளவு அள்ளப்பட்டது என்பதை கண்டு பிடிக்க முடியாது. அள்ளும்போது மட்டுமே, அவற்றில் விதிமீறல் கண்டறிய முடியும்.

இவ்வாறு, விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us