உள்ளடக்கத்திற்கு செல்ல

பிரதமர் மோடி குறித்து அவதூறு போஸ்டர்; மர்மநபர்கள் மீது வழக்கு
பிரதமர் மோடி குறித்து அவதூறு போஸ்டர்; மர்மநபர்கள் மீது வழக்கு
ADDED : ஆக 15, 2026 07:00 PM

அ நிறம் | அளவு
திருச்சி: திருச்சியில், பிரதமர் மோடி குறித்து, அவதுாறு போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
டில்லி, ஜந்தர் மந்தரில், மாணவர்கள் நடத்திய போராட்டத்துடன், பிரதமரை தொடர்புபடுத்தி, திருச்சி மாநகரப் பகுதியில், சில நாட்களுக்கு முன், அவதுாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
பா.ஜ., கட்சி பிரமுகர் ஒருவருக்கு, வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மீது, மர்ம நபர்கள் ஒட்டிய துண்டு போஸ்டர்களில், 'மோடி எங்களை சாகடித்தார். மாணவர்களின் ரத்தம் மோடியின் கைகளில்' என்ற வாசகங்களுடன், துப்பாக்கி மற்றும் கைரேகை படங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.
இது தொடர்பாக, திருச்சி மாவட்ட பா.ஜ., தலைவர் ஒண்டிமுத்து கொடுத்த புகார்படி, போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
