தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வந்தே பாரத் 'ஸ்லீப்பர்' ரயில்கள் 24 பெட்டிகளுடன் தயாரிக்க மெகா திட்டம்!

 வந்தே பாரத் 'ஸ்லீப்பர்' ரயில்கள் 24 பெட்டிகளுடன் தயாரிக்க மெகா திட்டம்!

 வந்தே பாரத் 'ஸ்லீப்பர்' ரயில்கள் 24 பெட்டிகளுடன் தயாரிக்க மெகா திட்டம்!


ADDED : ஆக 15, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 07:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''புதிய வந்தே பாரத், 'ஸ்லீப்பர்' ரயில்கள், 24 பெட்டிகளுடன் தயாரிக்கப்படும்,'' என, ஐ.சி.எப்., பொதுமேலாளர் மணீஷ் அகர்வால் தெரிவித்தார்.

சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், அதன் பொதுமேலாளர் மணீஷ் அகர்வால், தேசியக் கொடியேற்றி பேசியதாவது: ஐ.சி.எப்., ஆலையில், கடந்த நிதியாண்டில், 3,405 ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது, முந்தைய ஆண்டை விட, 13.2 சதவீதம் அதிகம். அதேபோல, 80,000வது பயணியர் ரயில் பெட்டியை தயாரித்தும், புதிய மைல்கல்லை ஐ.சி.எப்., எட்டியுள்ளது.தற்போது, 16 பெட்டிகளுடன் வந்தே பாரத், 'ஸ்லீப்பர்' ரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்து, 24 பெட்டிகள் கொண்ட, புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வடிவமைப்பு தயாராக உள்ளது.

விரைவில், இதற்கான தயாரிப்பு பணியை தொடங்க உள்ளோம். அதேபோல, 'ஏசி' பொது மற்றும் ஸ்லீப்பர் வகை பெட்டிகளைக் கொண்ட, புதிய அம்ரித் பாரத் ரயிலையும் தயாரிக்க உள்ளோம். இது, குறைந்த கட்டணத்தில் வசதியான பயணத்தை வழங்கும்.

நடப்பு நிதியாண்டில் 3,865 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், வரும் ஆண்டுகளில், 24 பெட்டிகளுடன் செல்லும், 50 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us