ADDED : ஜன 26, 2024 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக மின்தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. எனவே, பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்கிறது.
வரும் கோடைக் காலத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதனால், மின்தேவை மிகவும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்காக, இம்மாதம் முதல் மே வரை மின்சாரம் வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப முழுதுமாக மின்சாரம் வழங்க, நிறுவனங்கள் முன்வரவில்லை.
தற்போது, ஏப்., 1 முதல் மே 31 வரை தினமும் மாலை 6:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, 1,000 மெகாவாட் வீதம் மின் கொள்முதல் செய்ய, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப மின்சாரம் வழங்க உள்ள நிறுவனத்தை தேடி வருகிறது.

