உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 01, 2026 12:40 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி டில்லியில் பாயும் யமுனை நதியில், விரைவில், ஆடம்பர படகு போக்குவரத்து துவங்க உள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநில அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இதற்காக, மும்பையில் கட்டப்பட்ட, 40 பயணியர் பயணம் செய்யும் வகையிலான படகு, டில்லிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. அந்த படகில், உள்வேலைகள் நடந்து வருகின்றன.
அடுத்த, 15 நாட்களில், அந்த ஆடம்பர படகு, யமுனை நதியில் பயணம் செய்ய உள்ளது. இதற்கான கட்டணம் எவ்வளவு, எந்தெந்த இடங்களுக்கு பயணம் செய்யலாம் என்ற விவரம், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
