சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
ADDED : ஏப் 11, 2025 12:32 PM

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய ரயில்நிலையங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில்நிலையம். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படியிருக்கையில், சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயிலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரயில்நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்துள்ள நிலையில் விடப்பட்டுள்ள இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, அதிகாரிகளும், போலீசாரும் பெரும் பதற்றத்துடன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது.
ரயில்வே போலீசாரின் இந்த திடீர் சோதனையால் ரயில் பயணிகளை பீதிக்குள்ளாகினர்.