ADDED : ஜன 04, 2025 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அண்ணா பல்கலைக்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை கிண்டி சர்தார் பட்டேல் சாலையில், அண்ணா பல்கலை உள்ளது. கடந்த, 31ம் தேதி, பல்கலை அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் வந்தது.
அதில், பல்கலையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், மாலை வெடிக்கப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையறிந்த பல்கலை பதிவாளர் பிரகாஷ், கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் தெரிவித்தார். ஆனால், மிரட்டல் விடுத்த நாள், 31ம் தேதி என்பதால், மிரட்டல் வெறும் புரளி என்று காவல் துறையினர் முடிவு செய்து, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

