அண்ணா பல்கலை.,க்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனைக்கு பின் வதந்தி என உறுதி
அண்ணா பல்கலை.,க்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனைக்கு பின் வதந்தி என உறுதி
ADDED : ஜூலை 03, 2024 08:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் மெயில் வந்துள்ளது. இதனையடுத்து விரைந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் அண்ணா பல்கலை வளாகம் முழுவதும் சோதனையிட்டனர். சோதனையில் எந்த பொருளும் சிக்காததை அடுத்து, அது வதந்தி என்பது உறுதியானது.
மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று (ஜூலை 2) கவர்னர் ஆர்.என் ரவி தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில், இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.