UPDATED : பிப் 13, 2025 10:11 AM
ADDED : பிப் 13, 2025 08:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை எழிலக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் எழிலக வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்துக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
பின்னர் மோப்பநாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்மநபரை அண்ணா சதுக்கம் போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து, மிரட்டல் விடுத்த பாலாஜி என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.