தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை தீவிரம்
தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை தீவிரம்
ADDED : ஜன 05, 2025 10:23 AM

சென்னை: சென்னை தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்திற்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை காலை 9.30க்கு தொடங்குகிறது; கவர்னர் உரைக்குப் பின் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்கிறது. இந்நிலையில் இன்று (ஜன.,05) தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்திற்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

