பத்திரப்பதிவு வருவாய் இலக்கு ரூ.23,370 கோடியாக நிர்ணயம்
பத்திரப்பதிவு வருவாய் இலக்கு ரூ.23,370 கோடியாக நிர்ணயம்
ADDED : பிப் 20, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பத்திரப்பதிவு துறை வாயிலாக, 2024 - 25 நிதி ஆண்டில் வருவாய் வசூல், 23,370 கோடி ரூபாயாக இருக்கும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துறை வாயிலாக, 2023 - 24 நிதி ஆண்டில், 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டும் அளவுக்கு, தற்போது வருவாய் அதிகரித்துள்ளது.
இத்துறையில், பழைய கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள், 133 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.

