ஹைதராபாதில் மணிமேகலை பிரசுரத்தின் புத்தக வெளியீட்டு விழா, கண்காட்சி
ஹைதராபாதில் மணிமேகலை பிரசுரத்தின் புத்தக வெளியீட்டு விழா, கண்காட்சி
ADDED : அக் 26, 2025 01:43 AM
சென்னை: மணிமேகலை பிரசுரத்தின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் விற்பனை கண்காட்சி, தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத், மேற்கு மாரேட்பள்ளியில், வரும், 29ம் தேதி மதியம், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது.
கண்காட்சியில், தமிழ்வாணன் எழுதியுள்ள, தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் - 10, 'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி., அண்ணாமலை எழுதியுள்ள, காதலெனும் தீவினிலே, டாக்டர் எஸ்.ஏ.பி.ஜவஹர் பழனியப்பன் எழுதியுள்ள, ஒரு லட்சம் துடிப்புகள் , அந்துமணி எழுதியுள்ள, 'பார்த்தது, கேட்டது, படித்தது - பாகம் 23, தவத்திரு சஞ்சீவி ராஜா சுவாமிகள் எழுதியுள்ள, பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும், நல்லி குப்புசாமி எழுதியுள்ள, பாரதியின் விஸ்வரூப தரிசனம், லேனா தமிழ்வாணன் எழுதியுள்ள, வீழ்வதற்கல்ல வாழ்க்கை உட்பட, 18 நுால்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் வரவேற்புரை ஆற்றுகிறார். ஐக்கிய தமிழ் மன்றம் பெண்கள் பிரிவு தலைவி மற்றும் ஆர்.ஆர்., 'கேட்டரிங்' உரிமையாளர் ராஜேஸ்வரி ரமேஷ் தலைமை உரை ஆற்றுகிறார்.
ஐக்கிய தமிழ் மன்ற தலைவி நிர்மலா ரவிசங்கர், பொதுச்செயலர் ஜெயா மணிகாந்தன், பொருளாளர் செல்லம் காளி பிள்ளை முன்னிலை வகிக்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் ராஜி ரகுநாதன், சாரதா கலாசார மைய தலைவி சாரதா கிருஷ்ணன் பங்கேற்கின்றனர்.

